வீட்டில் தொழுகை : ௧௬ இஸ்லாமியர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் தொழுகை நடத்தியதற்காக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

உத்திரப்பிரதேசம் மாநிலம், மொராதாபத் மாவட்டத்தில் உள்ள சாஜ்லெட் பகுதியில் பள்ளிவாசல்கள் அருகில் இல்லாததால், அப்பகுதி மக்கள் வீட்டிலயே தொழுகை நடத்தினர். 

இதில், அதிக நபர்கள் திரண்டு தொழுகை நடத்தியதாக வீடுகளின் உரிமையாளர் உட்பட 16 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இதற்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவரும், எம்.பி,யுமான அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

"தொழுகை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பின்பு ஏன் வீட்டில் தொழுகை நடத்தியது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது? இது அநியாயம்". என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Praying at home Police case against Muslims


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->