2024 பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு சவாலாக இருக்கப் போகும் காட்சி இதுதான்.. பிரசாந்த் கிஷோர் கணிப்பு.!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து சந்தித்து. இதையடுத்து, கட்சியை மறுசீரமை செய்யும் நடவடிக்கையை கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இந்நிலையில், ஐக்கிய ஜனதாதளம், பாஜக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு பிரச்சார வியூகம் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, காங்கிரஸ் மறு அவதாரம் எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் சரி செய்ய வேண்டிய நேரம் இது. ஆன்மீக கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்கள் அனைத்தும் புதிதாக இருக்க வேண்டும். சோனியா காந்தி குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமை பொறுப்பில் இருந்து வெளியேறினாலும் அந்த கட்சி மீண்டும் உயிர் பெற முடியாது. காங்கிரஸ் இன்று தனது செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து படுத்தினாலே 2024 தேர்தலில் பாஜகவுக்கு சவால் விட முடியும். 

கிழக்கு மற்றும் தென் இந்தியாவை உள்ளடக்கிய சுமார் 200 பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக இன்னும் 50 இடங்களுக்கு மேல் பெற முடியாமல் திணறி வருகிறது. இதனால் 2024 மக்களவைத் தேர்தல் காங்கிரசுக்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prashant kishor press meet for congress


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->