தமிழகத்தில் 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது - தமிழக அரசு தரப்பில் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 10  சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படாது என்று, தமிழக அரசு சார்பாக உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி அறிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசின் சட்ட திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட்ட வழக்கில், 10% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில், திமுக சார்பில் அமைச்சர் பொன்முடி, பி.வில்சன் எம்.பி., பங்கேற்றனர். மேலும், 10% இடஒதுக்கீட்டை ஆதரித்த காங்கிரஸ், கம்னியூஸ்ட் கட்சிகளும் கலந்து கொண்டன.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், "பாஜகவிற்கு சமூக நீதி கொள்கை மீது  நம்பிக்கை இல்லை. மத்திய அரசு அவசர அவசரமாக 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

10% இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாது" என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudy say about EWS Reservation


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->