அரசியலில் வலது கரத்தை இழந்த பொன்முடி கதறல்..!! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ரத்த வாந்தி எடுத்ததால் விழுப்புரம் உண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

தீவிர சிகிச்சை பதிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ புகழேந்தி சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுக எம்எல்ஏ புகழேந்தியின் மரண செய்தி கேட்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தனது மனைவி உடன் உண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் திமுக எம்எல்ஏ புகழேந்தியின் உடலை காண ஓடோடி வந்துள்ளார். 

திமுக அமைச்சர் பொன்முடியின் 50 ஆண்டுகால நெருங்கிய நண்பரான புகழேந்தி, அமைச்சர் பொன்மொழியின் வலது கரமாக செயல்பட்டு வந்தவர். பொன்முடியில் தீவிர விசுவாசியாகவும் வெறியராகவும் பொன்முடியுடன் அரசியல் பயணத்தில் கடந்த 50 ஆண்டு காலமாக பயணம் செய்த புகழேந்தி கடந்த 1973 ஆம் ஆண்டு கிளைச் செயலாளராக இருந்து 1980-86 இல் மாவட்ட பிரதிநிதியாக இருந்து பின்னர் மாவட்டச் செயலாளராக உயர்ந்தவர்.

தனது நண்பன் உயிரிழந்த செய்தியை கேட்ட அமைச்சர் பொன்முடி தனது மனைவி விசாலாட்சியுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். தனது நண்பனை காண கண்ணீருடன் வந்த பொன்முடிய கண்ட திமுக தொண்டர்களும் கதறி அழுதனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ponmudi crying for DMK MLA pugazhenthi death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->