சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து., முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


பாஜக விடுத்த கோரிக்கையை ஏற்பதற்கு தயக்கம் காட்டி வரும் ரஜினிகாந்த், தைப்பொங்கலுக்கு அடுத்து தனி கட்சி பெயரை அறிவிக்க போகிறார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக கேட்டுக்கொண்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அதில் தான் அரசியலுக்கு வருவதற்கான பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுருந்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்த விட்டது, இருந்தாலும் ரஜினிகாந்த் தனி கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தனது மவுனத்தையே விடையாய் அளித்தார்.

சிலசமயம், ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்ததால் அவர் கட்சியை தொடங்கினாலும், பா.ஜ.க.வுடன் இணைந்தே செயல்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. சமீபத்தில் சென்னையில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்ட விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்திருந்தார்.

பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசிய போது, தான் இப்போது ‘தர்பார்’ படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதாகவும், தன்னுடைய ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று தனிக்கட்சி தொடங்கவே விரும்புவதாகவும் தன்நிலையை அவர் தெளிவுபடுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு (2020) தை மாததத்திற்கு பிறகு தனிக்கட்சியை அறிவிக்க போவதாக திட்டமிட்டுள்ளார். அவரது நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ பொங்கல் தினத்தில் வெளியாகிறது. அதனை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க இருந்தாலும், தர்பார் பட வெளியீட்டுக்கு பிறகு முழு நேர அரசியலில் ரஜினிகாந்த் இறங்க உள்ளார்.

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை அவர் எதிர்கொள்ள இருக்கிறார். இந்த தேர்தலை நட்பு ரீதியாக பா.ஜ.க.வுடன் இணைந்தே அவர் சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்ற வாக்குறுதியை ரஜினிகாந்திடம் இருந்து பெறுவதற்கே அவரது ரசிகர்கள் 23 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையில் தற்போது, அவர் தொடங்க இருக்கும் தனிக்கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் என்பதை தெரிவிக்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க தான் வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal after separate party name announced by rajinikanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->