ரஜினி பாஜகவில் சேர வேண்டும்.! முன்னணி தலைவர் கோரிக்கை.!  - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் பாஜகவில் இணைய வேண்டும் என்பதே தாம் விரும்புவதாக பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள திருமயம் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதனை புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதற்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க இருப்பதை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பொன் ராதா கிருஷ்ணன், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அதை தான் வரவேற்பதாகவும், அதே நேரத்தில் பாஜகவில் அவர் சேர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என அவர் குறிப்பிட்டார்.

பாஜகவில் ரஜினிகாந்தை சேர்க்கும் முயற்சியை டெல்லி பாஜக தலைமை ஈடுபடுகிறதா என்ற கேள்விக்கு, இல்லை என பதிலளித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon radhakrishnan request to rajini join bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->