இயற்கை வளம் கொள்ளை : லாரி கண்ணாடி உடைப்பு - பாஜக நிர்வாகி 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவிலான கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், குறைந்த அளவு கருங்கல் ஏற்றி செல்ல அனுமதி பெற்றுவிட்டு அதிகமான கருங்கற்கள் ஏற்றி செல்லப்படுவதால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து, பொள்ளாச்சி நகரம் வழியாக கருங்கற்கள் கொண்டு சென்ற இரண்டு லாரிகளை பா.ஜ.க நகரத்தலைவர் பரமகுரு மற்றும் அக்கட்சியினர் சேர்ந்து தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் கல் வீசியதில், ஒரு லாரியின் கண்ணாடி உடைந்துள்ளது. 

இது குறித்து, தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பா.ஜ.கவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதன் பின்னர், அவர்கள் இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்தனர். மேற்கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், தனது லாரி மீது கல்வீசி தாக்கியதாக கேரளாவை சேர்ந்த ஜோபி என்பவர் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பொள்ளாச்சி பா.ஜ.க நகர தலைவர் பரமகுரு, செந்தில் மற்றும் சபரி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pollachi Bjp Member arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->