தென் மாநிலங்களில் ஊழல் அதிகரித்துள்ளதால் மோடிக்கு கவலை.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் துடிப்போடு பாஜக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான முதல் கட்டப் பணிகளை பாஜக தொடங்கியுள்ள நிலையில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மோடி சந்தித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற முதற்கட்ட கூட்டத்தில் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "அனைவரும் சமூக வலைதளங்களில் முழு வீச்சில் இயங்க வேண்டும். சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்படும் நிபுணர்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். குறிப்பாக ராமர் கோயில் கட்டும் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பாஜகவுக்கு பொதுமக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று எண்ணாமல் களத்தில் இறங்கி அனைவரும் கட்சியை பலப்படுத்த வேண்டும்" என பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து தென் மாநில கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டா, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதன் லக்கரி மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "தென் மாநிலங்களில் குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஊழல் தலைவிரித்து ஆடுவது கவலை அளிக்கிறது. இலவசங்கள் வழங்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளதை தடுக்க வேண்டும்.

தொடர்ந்து இலவசங்கள் அதிகரித்தால் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். கடந்த 9 ஆண்டு கால பாஜக ஆட்சியின் சாதனைகள் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சென்று நமது கருத்தை பலப்படுத்த வேண்டும்" என பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMModi worried corruption has increased in southern states


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->