தமிழக பாஜக தலைவர்கள் எதிர்கொள்ளப்போகும் திடீர் சிக்கல்..? தேர்தலை சந்திக்கும் முன்னரே காவல்துறைக்கு பறந்த கடிதம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் சுவர்களில் தாமரை சின்னம் வரைவதற்கு தூண்டுதலாக இருந்த பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை மற்றும் தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் பாஜக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்காத நிலையிலும், தேர்தல் நடைமுறை இல்லாத நிலையிலும் சட்டவிரோதமாக பாஜகவினர் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் சுவர்களில் அக்கட்சியின் தேர்தல் சின்னமான தாமரையை வரைந்து வைத்து வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாக 2019 மே மாதம் வரை ரிசர்வ் என்று சொல்லி அரசு மற்றும் தனியார் வீட்டுச்சுவவர்களில் சட்டத்திற்கு புறம்பாக விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த விளம்பரத்திற்கு காரணம் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், தேசிய செயலாளர் எச்.ராஜா, பழனி பகுதியைச் சேர்ந்த நிர்வாகி கனகராஜ் ஆகியோர் தூண்டுதல் காரணமாக இந்த சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுவர் விளம்பரத்தை அரசு நிர்வாகம் அழிப்பதோடு, பாஜக நிர்வாகிகளிடம் மீது உரிய நஷ்டஈடு பெற வேண்டும். இது தொடர்பாக பழனி உதவி ஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர், காவல் உதவி ஆய்வாளர், ஆகியோரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் புகரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கை பதியவில்லை. இதனையடுத்து வளைத்தளத்தில் காவல்துறை தலைமை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

English Summary

petition against bjp officials


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal