பாஜக கூட்டணியில் 2 தொகுதியில் போட்டி! போட்டு உடைத்த IJK பாரிவேந்தர்! - Seithipunal
Seithipunal


இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் திருச்சியில் அக்கட்சி நிர்வாகிகளுடன் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தல் முடிவுகள் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் தேர்தல் வியூகம் குறித்த கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிங்களோடு அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து போட்டியிட்டோம். நாங்கள் எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம். எனவே நாங்கள் நாடாளுமன்றத்தில் போட்டியிட்டால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தான் போட்டியிடுவோம். 

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழகத்தில் நாங்கள் போட்டியிட கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் என இரண்டு தொகுதிகளை கேட்க உள்ளோம்.  தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு ஆட்சி அமைக்க முடியும் என நிரூபித்த கட்சி அதிமுக. அதற்காக தான் பாஜக போராடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்கள் மாற்றத்தை விரும்புவதால் நிச்சயம் அது நடைபெறும்'' என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parivendar announced IJK contest in 2 constituencies in NDA alliance


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->