பாகிஸ்தான் புதிய பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் இருவர்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. 

இதனையடுத்து பாகிஸ்தான் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

நாளை பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப்பை தேர்ந்தெடுக்க உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஷாபாஸ் ஷெரீஃப் புதிய பிரதமருக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. 

பாகிஸ்தானின் புதிய பிரதமராக வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஷபாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியாக பதவி வகித்தவர் என்பதும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்-ன் சகோதரர் ‌என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை புதிய பிரதமர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakistan new PM election 2022 shehbaz sharif


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->