இளைஞர்கள் மாணவர்கள் வெகுண்டெழுவார்கள்... ப.சிதம்பரம் பகீர்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய பொருளாதாரம் குறித்து கருத்து பதிவு செய்துள்ளது இணையத்தில் பெரு வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, இந்தியாவிற்கு மட்டுமல்லாது பொருளாதார வீழ்ச்சி என்ற பிரச்சனை நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும். 

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு மற்றும் வருவாய் இழப்பு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் கொதித்தெழும் அபாயம் அதிகளவு இருக்கிறது. 

நிர்வாக திறமையற்ற நபர்களின் சுற்று முடிந்துள்ளது. இப்போதைய பிரதமர் மோடியின் அரசு கடந்த ஜூலை 2014 ஆம் வருடத்தில் 7.39 விழுக்காடு பணவீக்கத்துடன் துவங்கிய நிலையில், டிசம்பர் 2019 ஆம் வருடத்தில் 7.39 விழுக்காடாக உள்ளது. 

உணவுவீக்கம் என்பது தற்போது 14.12 விழுக்காடாக உள்ளது. இதனால் காய்கறிகளின் விலை 60 விழுக்காடு அளவிற்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலையும் கிலோவுக்கு ரூ.100 ஐ கடந்து சென்றுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pa chidambaram says Indian economic in twitter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->