மம்தா பானர்ஜியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஓவைசி கண்டனம்! - Seithipunal
Seithipunal


ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து மேற்குவங்க முதலமைச்சரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியின் கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவரின் இந்த கருத்துக்கு மக்களவை உறுப்பினர் ஓவைசி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து மேற்குவங்க முதலமைச்சரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிகளிடையே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மம்தா பானர்ஜி பேசிய வீடியோவில் தெரிவித்திருப்பதாவது,

"ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் அமைப்பை மோசமானதாக நான் கருதவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பில் பல நல்ல மனிதர்கள் உள்ளனர். அவர்கள் பாஜகவை ஆதரிக்கவில்லை. அவர்கள் ஒருநாள் தங்களது மெளனத்தைக் கலைப்பர்". என்று தெரிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜியின் இந்தக் கருத்து எதிர்க்கட்சிகளிடையே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரின் இந்த கருத்துக்கு மக்களவை உறுப்பினர் ஓவைசி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் தெரிவித்ததாவது,

“2003-ம் ஆண்டு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வில் திரிணமூல் கட்சியின் தலைவர் அந்த அமைப்பை பாராட்டிப் பேசினார். இவ்வளவு வெளிப்படையான அவரது பேச்சுக்கு அவரது இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்". என்று விமர்சித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Owaisi condemns Mamata Banerjee comments


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->