திடீர் திருப்பம்... ஈபிஎஸ் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு - ஓபிஎஸ் அணியில் ஒலித்த குரல்..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான கிருஷ்ணன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக கரூர் வந்திருந்தார். அவரை மாநகர் செயலாளர் ரமேஷ் தலைமையிலான அதிமுகவினர் சிறப்பாக வரவேற்றனர். 

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த 50 ஆண்டுகால அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு சோதனை வந்துள்ளது.

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஓபிஎஸ் அவர்களை கையெழுத்து போட அனுமதித்தால் அவர்கள் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் ஆதரவு தருகிறோம். 

இன்று இரவு 12 மணி வரை அதற்கான கெடுவை விதித்துள்ளோம். அண்ணன் ஓபிஎஸ் இல்லாமல் கட்சியை கைப்பற்ற நினைத்தால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி அணியினர் நல்ல பாடத்தை கற்றுக் கொள்வார்கள்.

எங்கள் அணியில் இருக்கும் அனைவரும் எம்ஜிஆர் உடன் பயணித்தவர்கள். ஒரு நாளும் திமுகவுடன் உறவு வைத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரை பார்த்தது கூட இல்லை. பாஜக எங்களை இயக்க நாங்கள் சின்னப்பிள்ளை இல்லை. 

யாருடைய தயவும் எங்களுக்குத் தேவையில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அண்ணன் ஓபிஎஸ் அறிவிப்பார். பாஜக அதிமுக கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தோம். பாஜக எங்களிடம் கேட்டுக் கொண்டால் இடைத்தேர்தலில் போட்டியிட நாங்கள் ஆதரவு தருவோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் குறித்தான படிவத்தில் ஓபிஎஸ்.,ஐ கையெழுத்திட அனுமதித்தால் ஈபிஎஸ் அணி வேட்பாளரை ஆதரிப்பதாக ஓபிஎஸ் அணியினர் தெரிவித்திருப்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தை புரட்டி போட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS team said they support EPS Candidate in erode east


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->