அடுத்த மாநாடு எங்கே? எப்போது? அதிரும் மேற்கு மண்டலம்.!! இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலுக்கு பிறகு தனது பலத்தை நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்த மாநாடு திருச்சியில் உள்ள பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், ஐயப்பன், ஜே.சி.டி பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் அணியினர் எதிர்பார்த்த அளவைவிட திருச்சி மாநாடு சிறப்பாக அமைந்ததால் தமிழகம் முழுவதும் மேலும் 4 இடங்களில் மாநாடு நடத்த திட்டமிட்டனர்.

இதற்கிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஓபிஎஸ் திடீரென சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் அரசியலில் இணைந்து செயல்பட போவதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர். இதனால் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக அடைந்தனர்.

இந்த நிலையில் ஓபிஎஸ் அணியினரின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த ஜூலை 1ம் தேதி சென்னை எக்மோர் பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த மாநாடு நடத்துவது குறித்தும், டிடிவி தினகரனுடன் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விரிவான ஆலோசனை நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ் அணியினர் சார்பில் அடுத்த மாநாடு குறித்தான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. திருச்சியில் நடைபெற்ற மாநாடு போன்று கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த வேண்டும் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் சேலம் அல்லது கோவையில் மாநாடு நடத்த ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ் அணியினரின் அடுத்த மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. குறிப்பாக அதிமுக சார்பில் மதுரையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநில மாநாடு நடைபெற உள்ளதால் அதற்கு போட்டியாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS team next meeting announcement release today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->