மீண்டும் அதிமுகவில் யுத்தம் ஆரம்பம்... கலக்கத்தில் தலைமை.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பல இடங்களில் தோல்வி அடைந்தது. தென் மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட தோல்வியும், சென்னையில் ஏற்பட்ட தோல்வியும் முக்கிய காரணமாக அமைந்தது. 

இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு செய்வதில் ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் இடையே நேரடியாக மோதல் ஏற்பட்டது. அப்போது அதிக எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்ததால் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசிக் கொள்ளவில்லை. அதன்பிறகு, சசிகலா பேசிய ஆடியோ ரிலீஸ் ஆனா பிறகு ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். 

இதனிடையே, நெல்லை வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு பகுதியில் அதிமுக தலைமைக்கு எதிராக மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் அதிமுக கட்சி செயல்பாடுகளில் ஜெயலலிதா அவர்களால் அடையாளம் காணப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்களிடம் கலந்தாலோசிக்காமல் முக்கிய செயல்பாடுகள் , நடவடிக்கைகளை எடுத்ததால் தேர்தலில் தோல்வியடைந்தோம். இனிமேலும், இது தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்  என மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் போற்றியுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக எனும் கோட்டையின் பாதுகாவலர் ஓபிஎஸ் அவர்களே,, உங்கள் தலைமையில் கழகத்தை வழி நடத்துவோம் என அதிமுகதேனி மாவட்ட மீனவர் அணி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடையே போஸ்டர் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops supporters banner issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->