வேற வழியில்ல.. கடைசி ஆயுதம் இது தான்.. ஓ.பி.எஸ்ஸின் இறுதி நம்பிக்கை காப்பாற்றுமா.? கைவிடுமா.?! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் இரட்டை தலைமை பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டதாக அனைவரும் எண்ணி இருந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. 

ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் அதிமுகவின் தலைமை யார் என்ற கேள்வி எழுந்த போது சசிகலா பொறுப்பேற்றார். ஆனால், ஊழல் வழக்கில் அவர் சிறைக்கு செல்ல கட்சியை ஓபிஎஸ் இடமும், முதலமைச்சர் பதவியை இபிஎஸ் இடமும் கொடுத்துவிட்டு சென்றார். 

நிலைமை இப்படி இருக்க சசிகலா சிறைக்கு சென்றபின் தினகரனை விலக்கிவிட்டு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் கொடி கட்டி பறந்தனர். 2021 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. 

அந்த தகராறு தற்போது வரை தொடர்ந்த நிலையில், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ மொத்தமாக இபிஎஸ் விலக்கி விட்டுள்ளார். சட்டமும் கைவிட்டு விட ஓபிஎஸ் தனது கடைசி ஆயுதத்தை பயன்படுத்த இருக்கிறார். 

அதாவது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முக்கியமானவர்களாக இருந்த சீனியர்களின் உதவியை அவர் நாட இருக்கிறாராம். தொண்டர்களை முழுவதுமாக நம்பி அவரது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனை அவரது சமீபத்திய பேட்டி தான் உறுதிப்படுத்தியது. மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனை சமீபத்தில் ஓபிஎஸ் சந்தித்து இருப்பது இந்த திட்டத்தை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது. 

அடுத்தடுத்து கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு வழங்குமாறு ஓபிஎஸ் கோரிக்கை விடுக்க இருக்கிறாராம். இதன் மூலம் அந்த மூத்த தலைவர்களின் ஆதரவாளர்களை தனது ஆதரவாளராக மாற்றலாம் என்பது ஓபிஎஸ்-இன் நம்பிக்கை. இந்த நம்பிக்கை கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops last plan using admk seniors to encourage himself


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->