எனது அடுத்த கட்ட நகர்வு இதுதான்.. பரபரப்பை கிளப்பிய ஓ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எதிர்வரும் மக்களவை கொடுத்ததில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் "தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக நடைபெற உள்ளது. ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மேலும் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் மக்கள் என்னை ஆதரிக்கின்றனர்.

எனது அடுத்த நகர்வு மக்களைப் பற்றியது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்திக்கும். நான் அதிமுகவுக்கு எதிராக நிற்கவில்லை. கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றும் எண்ணம் எனக்கு இல்லை. அதிமுகவை காப்பாற்றவும், எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதிகளின்படி கட்சியை நடத்தவும் போராடி வருகிறேன். அதிமுக ஜனநாயக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்" என தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS explain about him future politicsfuture politics


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->