எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் எங்கு? எப்போது தெரியுமா.? - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் கடந்த 17 மற்றும் 18 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 26 கட்சிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் அணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தி தேர்தலுக்கான வியூகங்கள் உள்ளிட்டவற்றை வகுப்பது குறித்து முடிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 25 மற்றும் 26 தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தை உத்தவ் தாக்கரேயின் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஒருங்கிணைக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Opposition party 3rd discussion meeting on August 25


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->