ஆளுநர் மட்டுமல்ல.. தமிழ்நாட்டின் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் - சீமான்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஆளுநர் மட்டுமல்ல மக்கள் அனைவரும் அரசியல் பேச வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். மேலும் திராவிட கட்சிகளை தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம்.

தமிழக மீனவர்கள் கைது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும். அண்ணாமலை பேச வேண்டியதெல்லாம் ஆளுநர் பேசி விடுவதால் அண்ணாமலைக்கு குழப்பம். ஆளுநர் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும்.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உண்டு ஆளுநர் வெறும் நியமன உறுப்பினர் தான். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய நீங்கள் யார்? என கேள்வி எழுப்பிய அவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது மக்களாட்சிக்கு விரோதமானது என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்று சிலருக்கு பயம் உள்ளது. ஏன் இதற்கு முன்பு நடிகர் விஜய் மது குடிக்கும் மற்றும் சிகரெட் பிடிக்கும் போன்ற காட்சிகளில் நடித்தது இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK seeman speech about governor


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->