#ஈரோடு கிழக்கு:: நாதக வேட்பாளர் மேனகா நவநீதன் வேட்பு மனு தாக்கல்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்வார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

அதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவப்பிரகாசம், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு மற்றும் ஓபிஎஸ் தரப்பில் முருகானந்தம் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இரண்டாம் நாளான நேற்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட 5 பேர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். 

இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மேனகா நவநீதன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின் பொழுது கையில் கரும்பு ஏந்தி ஊர்வலமாக வந்ததால் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் உண்டானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK candidate Maneka filed nomination in erode east byelection


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->