"கோடை வெப்பத்தை தணிக்க"... அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் "இடியுடன் கூடிய மழை"..! வானிலை மையம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை செய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Next 3 hours thunderstorm lightning with moderate rain in 11 districts of tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->