மீண்டும் சாதித்த எடப்பாடி பழனிச்சாமி.! மத்திய அரசு கொடுத்த இன்பதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது 23 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளித்தது. மத்திய அரசு அறிவித்த இந்த அறிவிப்பில் பெரும்பாலும் அனைத்து மருத்துவ கல்லூரிகளும் தென் மற்றும் மேற்கு தமிழகத்திலையே அமைத்துள்ளது. இதில் வடதமிழகத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் கூட ஒதுக்கப்படவில்லை என வடதமிழக மக்கள் கவலை தெரிவித்தனர்.

இதையடுத்து, வடதமிழக மக்களின் கோரிக்கையை, அம் மக்களின் குரலாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வடதமிழகத்திலும் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. 

இந்தநிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, அதன்படி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகையில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க, மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அந்தவகையில், கடந்த அக்டோபர் மாதம் 6 மருத்துவ கல்லுரிகளுக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் மூன்று மருத்துவ கல்லுரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் மூலமாக 9 மருத்துவக்கல்லுரிகள் அமையவுள்ளது.  ஒரே ஆண்டில் 9 கல்லூரிகள் அமைத்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new three medical colleges for tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->