மேல்மா விவசாயிகளுடன் சுமுக நிலை உருவாக்கும்: கனிமொழி நம்பிக்கை.!! - Seithipunal
Seithipunal


திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக்கேட்பு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெற்றது. திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையிலான குழுவினர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, கனிமொழி கூறும்போது "தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களது கருத்தை கேட்டறிந்து மக்களின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு நிலம் தர மறுத்து விவசாயிகள் போராடுகின்றனர். தொழிற்சாலை தொடங்கி வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என கிராம மக்களும் கூறுகின்றனர். வேளாண்மை சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்தையும், மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை ஒப்பிட கூட முடியாது. விவசாயிகளுடன் பேசி தமிழக அரசு சுமூகமான நிலையை உருவாக்கும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Negotiation with farmers in melma sipcot issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->