வெற்றி பெற்ற உடனே நரேந்திர மோடி செய்த முதல் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி என்ற பெயருக்கு முன்னால் ‘செளகிதார்’ என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டார். அவரை தொடர்ந்து பாஜகவை சேர்ந்தவர்களும் ‘செளகிதார்’ என்ற வார்த்தையை சேர்த்துக்கொண்டனர். 

தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் மீண்டும் மோடி பதவி ஏற்க உள்ளார். பாஜக 303 தொகுதியை வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இதையடுத்து ‘செளகிதார்’ என்ற வார்த்தையை டுவிட்டரில் இருந்து நீக்கிவிட்டு நரேந்திர மோடி என்று வைத்துள்ளார். 

மேலும் இந்தியாவுக்காக உழைப்பதில் காவலாளி என்ற உணர்வு எப்போதும் என்னுடன் இருக்கும். டுவிட்டரில் இருந்து ‘செளகிதார்’ என்ற வார்த்தை நீக்கப்படலாம், ஆனால் என் உள்ளத்தில் இருந்து நீங்காமல் நினைவில் வைத்துக் கொள்வேன் என மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

narendra modi remove chowkidar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->