அடுத்த பரபரப்பு.. கொளுத்தி போட்ட அண்ணாமலை.. தேசிய அளவில் பற்றி எரியும் சம்பவம் .!! - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளர் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததற்கு தேசிய ஊடகவியலாளர் நல சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் வினோத் அமர்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில் "திரு.அண்ணாமலை அவர்களுக்கு எதிராக மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.ஒரு செய்தியை செய்தியாக மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய ஊடகங்கள் ஒரு தலைவரோ அல்லது ஒரு இயக்கத்தின் மீதோ வன்மம் விதைப்பது அல்லது சேற்றை வாரி இறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஏற்க இயலாதது.

பாரத தேசத்தின் முகமான தேசிய தெய்வீக சிந்தனைகளை மக்கள் மனதில் வளர்த்தெடுப்பதில் அக்கறை கொண்டுள்ள கண்ணியமிக்க தலைவர்களை கேள்விகள் என்ற பெயரில் சிக்க வைத்து அவர்களை பொய்யாக சித்தரித்து பின் அவர்களை வசைபாடுவது ஒரு இயக்கத்தின் அல்லது அரசியல் கட்சியின் முகமாக செயல்படுவது என்பது ஊடக தர்மம் அல்ல.
முன்பு தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் பாஜக மூத்த தலைவர் திரு.ஹெச்.ராஜா தற்போது பாஜக தமிழக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் என தமிழகத்தில் சில ஊடகங்களின் வன்மத்தை விதைக்கும் பட்டியல் நீள்கிறது.


திமுகவின் அமைப்பு செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்கள் Red Light ஊடகங்கள் என்று சொன்ன போதும், நாம தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் செருப்பால் அடிப்பேன் என்ற போதும், மற்றொருமுறை பத்திரிகையாளர்களை பார்த்து மண்டையை உடைப்பேன் ராஸ்கல் என்ற போதும், தோழமை சுட்டிய ஊடகவியலாளர் சங்கங்கள் பாஜக தலைவர்களான அண்ணாமலை ஹெச்.ராஜா மற்றும் தேமுதிக தலைவர் திரு.விஜயகாந்த் போன்றவர்களை குறி வைத்து தாக்குதல் அவர்கள் மீது வன்மம் விதைப்பது அல்லது அவர்கள் மீது களங்கம் கற்பிப்பது போன்ற செயல்களை செய்யும் ஊடகவியலாளர்கள் மற்றும் அதற்கு துணைபோகும் சங்கங்களை தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் வன்மையாக கண்டிப்பதோடு ஒருதலை பட்சமாக நடக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறது" என அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NAJW strongly condemned Annamalai for criticizing journalist


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->