ஒட்டுமொத்தமாக அனைத்திலிருந்தும் வெளியேற முடிவெடுத்த மோடி.! அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்த பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகளவில் ட்விட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு அடுத்த இடத்தில் பிரதமர் மோடி உள்ளார்.

பிரதமர் மோடியை ட்விட்டரில் 5 கோடியே 33 லட்சம் பேரும், ஃபேஸ்புக்கில் 4 கோடியே 40 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 3 கோடியே 52 லட்சம் பேரும், யூ டியூபில் 45 லட்சம் பேரும் மோடியைப் பின் தொடர்கின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தனது பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத்தள கணக்குகளை முடித்துக்கொண்டு வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மோடி எதற்காக இந்த முடிவை என்பது குறித்த எந்த விளக்கமும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் பாஜகவினர் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi thinking of giving up his social media accounts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->