எம்எல்ஏவுக்கு கத்தி குத்து.! படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


எம்எல்ஏவை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகாவில், காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்து வருபவர் தன்வீர் செய்ட், மைசூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த அவரை, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் திடீரென பாய்ந்து கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ தன்வீர் செய்ட், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து, எம்எல்ஏவை கூர்மையான கத்தியால் குத்திய ஃபர்ஹான் என்ற நபரை பிடித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

காவல்துறை ஃபர்ஹானிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,தமக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கித் தருமாறு பலமுறை எம்எல்ஏவுக்கு கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காங்கிரஸ் எம்எல்ஏவை கத்தியால் குத்தியதாக, பிடிபட்ட நபர், போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla attacked by knife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->