சம்மர் ட்ரிப் கேன்சல்.. இன்றே சென்னை திரும்பும் முதல்வர்.. அதிர வைக்கும் பின்னணி.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்துடன் சென்ற தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தனது திட்ட பயணத்தின் முன்னதாகவே இன்று சென்னை திரும்புகிறார். கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி, ப்ரையண்ட் பூங்கா, குணா குகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்வையிட திட்டமிட்டு இருந்த நிலையில் அவற்றைப் பார்வையிடவில்லை. 

இந்த பயணத்தின் போது பெரும்பால நேரம் பாம்பாறு பகுதியில் இரு உள்ள நட்சத்திர விடுதியிலேயே குடும்பத்தினருடன் சமூக ஸ்டாலின் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் முதலமைச்சர் ஆக இருக்கும் மு க ஸ்டாலின் கோடை சுற்றுலா சென்ற நிலையில் தமிழகத்தில் போதைப் பொருளால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கடும் வெயிலால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்ட கடும் வெயிலால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள சூழலில் முதலமைச்சர் குடும்பம் சுற்றுலா சென்றதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதன் காரணமாகவே முதலமைச்சரின் பயணத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு உடனடியாக சென்னை திரும்புவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொடைக்கானலில் இருந்து மதுரை திரும்பும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து சென்னைக்கு விமான மூலம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து வீடு செல்லும் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin summer trip cancelled return to Chennai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->