திமுக எம்எல்ஏ புகழேந்தியின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது.. மு.க ஸ்டாலின் வேதனை.!! - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுக எம்எல்ஏ புகழேந்தியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் இரங்கலை தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனது இரங்கல் செய்தியில் "புகழேந்தியின் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடல் நலம் பற்றி சிந்திக்காமல் திமுக வெற்றியாக பணியாற்றி வந்தவர் புகழேந்தி. உடல்நலம் பெற்று மீண்டும் வருவார் என்று நம்பி இருந்த நிலையில் புகழேந்தி நம்மை விட்டு சென்றுள்ளார். ஈடு செய்ய முடியாத புகழேந்தியின் மறைவால் வாடும் குடும்பத்தினர் திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்துள்ளார் மு.க ஸ்டாலின்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin condolences to DMK MLA pugazhenthi death


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->