பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு 2 மணிமண்டபங்கள்!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


முத்துராமலிங்க தேவரின் 116வது குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் செல்கிறார். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அக்டோபர் 30ம் தேதி ராமநாதபுர மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்துவார்கள். பசும்பொன்னில் 3 நாட்களில் நடைபெறும் இந்த விழா இன்று தொடங்கி உள்ளது. 

இந்த நிலையில் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்காக அரசு சார்பில் 2 மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக அஞ்சலி செலுத்தும் வகையில் ₹1.43 கோடியில் ஒரு மணிமண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ₹12.54 லட்சம் மதிப்பில் மற்றொரு மண்டபம் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin announced 2 memorial hall for muththuramalinga Devar in Pasumpon


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->