"கிராமப்புற இளைஞர்களுக்கு நீங்கள் நம்பிக்கை.. ஆவலாக காத்திருக்கிறேன்.." தோனிக்கு ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தோனி. அவரது பிறந்த நாளான இன்று 41வது வயதில் தோனி அடி எடுத்து வைக்கிறார். கடந்த 2004 இல் இந்திய கிரிக்கெட் அணியில் தோனி அறிமுகமானார். 

2019 ஆம் ஆண்டுவரை 90 டெஸ்ட், 350 ஒருநாள் போட்டிகள், 98 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி 17 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களை தோனி குவித்துள்ளார். இந்திய அணிக்காக விக்கெட் கீப்பிங், கேப்டன்சி, பேட்டிங் என்று தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர் தோனி.

அவருக்கு தமிழகம், இந்தியா என்று மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று 41வது பிறந்த நாள். 

அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். 

அதில்,"பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி.!! உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் சொந்த மண்ணில் (சென்னையில்) நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin wishes to ms dhoni


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->