வெள்ளை அறிக்கை மட்டுமல்ல வெள்ளரிக்காயையும் தருவோம்”..ஸ்டாலினை நக்கலடித்த ராஜேந்திர பாலாஜி...!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை கேட்ட  திமுக. தலைவர் ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி வெள்ளரிக்காய் தருவோம் என பதிலளித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி, முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். அவருடன் தமிழக பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர்.

மேலும் இவர்களை தொடர்ந்து,பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகளுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிஷியஸ் நாட்டிற்கும்,சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அமெரிக்காவிற்கும்,அமைச்சர் நிலோபல் கஃபில் ரஷ்யாவிற்கும் சுற்றுப்பயணம் சென்றனர்.

இதனை கடுமையாக விமர்ச்சித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் “தமிழக அமைச்சரவை, சுற்றுலா அமைச்சரவையாக மாறியுள்ளது” என கிண்டல் கேலி செய்தார். இந்நிலையில் தற்போது தமிழகம் திரும்பிய முதல்வரை, வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன?எவ்வளவு முதலீடு கொண்டுவரப்பட்டது  என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்க்கு பதிலளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஸ்டாலினுக்கு வெள்ளை, மஞ்சள், பச்சை அறிக்கையுடன் கூடவே வெள்ளரிக்காயையும் சேர்த்து தருகிறோம் என நக்கலாக பதிலளித்துள்ளார்.

அதேபோல்,முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.இது போல் ஏட்டிக்கு போட்டியாக இவருக்கு அவர் அவருக்கு இவர் என பதிலளித்தவருவது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ministera balaji replies against Stalin statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->