திமுகவின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே தாக்கல் செய்யப்பட்ட மசோதா.! இப்போது தேர்தல் இல்லை.? 6 மாதம் பதவிக்காலம் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று இறுதி நாள் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து வருகிறார், அதில், வரதட்சணை கொடுமைக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்ததை, 10 வருடங்களாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், "பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். பெண்களை பின்தொடரும் குற்றத்திற்கு 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது." என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கூறினார். மேலும், குலக்கல்வி திட்டத்தின் மறு உருவம் புதிய கல்விக் கொள்கை என்றும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து அரசு விவாதிக்க மறுப்பதாக கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

அதையடுத்து, திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்திற்கு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மணமகன் அல்லது மணமகளின் சொந்த ஊரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்யலாம். திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் தான் பதிவு செய்ய முடியும் என்பதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சி, மாநகராட்சிகளில் தனி அலுவலர் பதவிக்காலத்தை நீட்டிக்க சட்டமுன் வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 6 மாதங்கள் நீட்டிப்புக்கான சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. பதவிக்காலம் நீட்டிப்புக்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. நகராட்சி, மாநகராட்சித் தேர்தலை உடனே நடத்த திமுக கோரிக்கை வைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister velumani new bill filed assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->