என் வீடு முன் போராட்டம் ஏன்? பார் டெண்டரில் முறைகேடா? விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.! - Seithipunal
Seithipunal


சென்னை, பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு  இன்று காலை, தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டம் குறித்தும், பார் டெண்டரில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்ததா அவரின் பெட்டியில்,

"டாஸ்மாக் பார் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு அறுபத்தி ஆறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதே 66 நிபந்தனைகள் தான் இப்போதும் இந்த டெண்டரில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதலாக இரண்டு நிபந்தனைகள் சேர்க்கப்பட்டு 68 நிபந்தனைகள் ஆக நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்த டெண்டர் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் எந்தவிதமான ஒளிவு மறைவுக்கும் இடமில்லை. 

எனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் நான் கேள்வி கேட்டேன்., உங்களுக்கு இந்த டெண்டர் சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், என்னை சந்தித்து மனு கொடுத்தீர்களா? என்று கேள்வி கேட்டதற்கு, அவர்கள் கொடுக்கவில்லை என்றார்கள்.

இந்த ஏழு மாதகாலத்தில் என்னை சந்தித்து ஏதாவது பேசி இருக்கிறீர்களா? என்று கேட்டேன்., அவர்கள் இல்லை என்றார்கள். டாஸ்மார்க் எம்டியை சந்தித்து இது சம்பந்தமாக புகார் மனுக்கள் ஏதேனும் கொடுத்தீர்களா? என்று கேட்டேன். ஆனால் அவர்கள் இல்லை என்றார்கள். எந்த அடிப்படையில் நீங்கள் என் வீட்டின் முன்பு போராட்டங்கள் நடத்திய நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினேன். அவர்கள் மதுரையில் சொன்னார்கள், அந்த ஊரில் சொன்னார்கள் என்று யூகத்தின் அடிப்படையில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்கள்.

கடந்த வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களில் மட்டும் தான் இந்த டெண்டர் நடந்துள்ளது. ஒன்றாம் தேதி விடுமுறை, இரண்டாம் தேதி விடுமுறை. டெண்டர் புள்ளிகள் கோரப்பட்டு திறக்கப்பட்ட பிறகு இன்றுதான் அதற்கான ஆய்வு செய்யும் பணி நடைபெற உள்ளது.

இந்த இரண்டு நாட்களுக்குள் என்ன முறைகேடுகளை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? யாருக்கு இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய போது, மதுரையில் அவர்கள் சொன்னார்கள்., இந்த ஊரில் இவர்கள் சொன்னார்கள் என்ற யூகத்தின் அடிப்படையில் தெரிவித்தனர்.

இதனையடுத்து நான், 'உங்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை எழுத்துப்பூர்வமாக என்னிடம் கொடுங்கள்.. என்னென்ன தவறுகள் நடந்து உள்ளது என்பதை சொல்லுங்க என்று கேட்டேன்' , அதற்க்கு அவர்கள் நாங்கள் எழுதிக் கொடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

சரி என்று அவர்களிடம் நான், 'அரசினுடைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி தெளிவாக கடைபிடிக்கப்படும். இதில் எந்தவிதமான விருப்பு, வெறுப்புகள் யிருக்காது. முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், அதிக விலையில் கேட்பவர்களுக்கு நிர்வாகம் அனுமதி கொடுக்கும்' என்று சொல்லி அனுப்பிவைத்தேன்" என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister senthilbalaji say about tasmac bar issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->