திடீர் பரபரப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி "புழல் சிறைக்கு" மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு கடந்த ஜூன் 21 ஆம் தேதி செந்தில் பாலாஜியின் இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது நீதிமன்ற காவலில் இருந்து வருவதால் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் சிறைக்கு மாற்றலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூன்று வாரங்கள் கடந்த நிலையில் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மூன்றாவது முறையாக வரும் ஜூலை 26 ஆம் வரை நீதிமன்றத்தால் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நிலையில் கைதி எண் 1440 உடன் புழல் சிறைக்கு மாற்றப்படுகிறார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Senthil Balaji was discharged and confined in Puzhal Jail


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->