அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்.. அமைச்சர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சில நாட்கள் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் ஒற்றை தலைமையில் அதிமுக கட்டுபாட்டுடன் கொண்டு செயல்பட வேண்டும். இரட்டை தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. 

ஒரே தலைமை உருவாக்குவது குறித்து அதிமுக பொதுக்குழு வலியுறுத்துவோம். அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்கவேண்டும். ஆளுமை திறன் உடைய ஒருவர் தலைமையில் இல்லை. 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில்  அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக பேசப்படவில்லை. மேலும், அதிமுக பொதுக்குழு குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister rajendra balaji says admk meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->