காவி கட்சியில் சேர்ந்து விட்டு அரசியல் பேசலாம்.!! ஆளுநரை வெளுத்து வாங்கிய ரகுபதி.!! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ரவி தனது பொங்கல் வாழ்த்து செய்தியின் போது காவி நிறத்தில் ஆன திருவள்ளூர் படத்தை பதிவிட்டு இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "தனக்குத் தெரியாத பலவற்றைக் குறித்து, தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாடிக்கை;

வேதநெறிக்கு எதிரான குறள்நெறி கூறிய அய்யன் வள்ளுவரின் வரலாறே தெரியாமல், ஆளுநராக வந்ததாலேயே தான் சொல்வதெல்லாம் வேதம் என்பதைப் போல ஆளுநர் நடந்து கொண்டிருக்கிறார்”

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"என்ற பாரதியின் பாடல் வரிகளில் உள்ள தமிழ்நாடுபெயர் சர்ச்சையில் கடந்த ஆண்டு சிக்கித் தவித்து,எட்டுத்திக்கும் உள்ள தமிழர்களுடைய எதிர்ப்புகளுக்குத் தலைபணிந்து, இது தமிழ்நாடு தான்’ என்று ஒப்புக்கொண்ட ஆளுநர், ஆளுநர் இந்தாண்டு வள்ளுவரை வம்புக்கு இழுத்திருக்கிறார்;

பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு வந்த பணிகளைச் செய்யாமல், கையில் கிடைக்கும் அனைத்துக்கும் காவிச் சாயம் பூசிக் கொண்டு இருக்கும் மாண்புமிகு ஆளுநர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் பக்கம் இன்று திரும்பியிருக்கிறார்;

ஏதோ பாரம்பர்யமாம்!?, அதுதான் ஈராயிரம் ஆண்டுகளாகக் கோடிக்கணக்கான மக்களை ஒடுக்கிய பாரம்பர்யம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்; ஆளுநர் உடனே காவிக் கட்சியில் சேர்ந்துவிட்டு, அரசியல் பேசலாம்; காலதாமதமாகும் என்றால் அய்யன் திருவள்ளுவர் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேசுவதை விடுத்து அரசியல் சட்டப்படி நடக்க முயற்சி செய்ய வேண்டும்" என தமிழக ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister raghupathi criticized governor Ravi 16012021


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->