தமிழ் தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்க மறுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள்.. நடவடிக்கை எடுக்கப்படும்.! அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன்படி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ரிசர்வ் வங்கியின் ஒரு சில அதிகாரிகள் எழுந்து நிற்க வில்லை.

நிகழ்ச்சி முடிந்த பின்பு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு என் மரியாதை செலுத்தவில்லை என ஒரு சிலர் அவர்களைக் கேள்வி கேட்டனர். அதற்கு தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் கூறி இருப்பதாக அவர்கள் பதிலளித்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு, சலசலப்பு உண்டானது.

ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது எழுந்து நிற்கும் மறுத்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விவகாரத்தில், உரிய நடவடிக்கை மேற்கொண்டு குழப்பங்களை நீக்குவோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister PTR says reserve bank officers issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal