#மயிலாடுதுறை : கொட்டும் மழையில் நிவாரண உதவிகள்.. களத்தில் இறங்கிய அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்ட பகுதியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் மெய்யநாதன் நிவாரண உதவிகளை வழங்கி இருக்கின்றார். 

கடந்த நவம்பர் 11ம் தேதியில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதீத கனமழை பெய்தது. மேலும், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. 

சீர்காழி அருகில் இருக்கும் இருவக்கொல்லை பகுதியில், கடந்த 4 நாட்களாக தண்ணீர் வடியவில்லை. எனவே, அங்கு இருக்கின்ற 150 குடியிருப்புகளை சுற்றியும் மழைநீர் பெருமளவில் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெள்ள பாதிப்புகள் குறித்து தகவலறிந்த திமுக அமைச்சர் மெய்யநாதன் டிராக்டரில் இருவக்கொள்ளை பகுதிக்கு சென்று, அங்கே பாதிக்கப்பட்ட வெள்ள பாதிப்புகள் பற்றி கேட்டறிந்துள்ளார். பின், அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister meyyanadhan In flood area of mayiladudurai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->