சசிகலா, மு.க ஸ்டாலின் குறித்து அதிமுக அமைச்சர் பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட மைதானத்தில் சமூக நலத்துறை சார்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சி.வி. சண்முகம், பயனாளிகளுக்கு தாலி தங்கத்தை வழங்கினார். இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குக்கிராமத்தில் பிறந்தவர் ஆவார். விவசாயத்தை முதன்மையாக வைத்து வாழ்ந்து, தற்போது முதல்வராக மாறியுள்ளார். பல்வேறு பணிகள் இருந்தாலும் கிராமத்திற்கு மாதம் ஒருமுறை சென்று வருகிறார். 

அவர்தான் உண்மையான விவசாயி. எளிமையாக வாழ்ந்து வருகிறார். மு.க ஸ்டாலினுக்கு விவசாயம், விவசாயிகளின் துன்பங்கள் குறித்து எதுவும் தெரியாது. அவரின் பிறப்பும், வளர்ந்த விதமும் வேறு. பச்சை துண்டை போட்டால் விவசாயியாக மாறிவிட முடியாது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மு.க ஸ்டாலினை ஒப்பிட்டு பாருங்கள். 

மு.க ஸ்டாலின் பேசி வருவதை மக்கள் நம்ப தயாராக இல்லை. சட்டமன்ற உறுப்பினராகவும், மேயராகவும், தமிழக முதல்வராகவும் இருக்கையில் செய்ய முடியாததை 100 நாட்களில் செய்வதாக கபட நாடகம் ஆடி வருகிறார். சசிகலா அதிமுக கொடியை உபயோகம் செய்ததற்கு சட்டம் தனது கடமையை செய்யும்.. தினகரனிடம் கட்சியை ஒப்படைத்து சிறைக்கு சென்ற நிலையில், ஒரே மாதத்தில் மொத்தத்தையும் அவர் உடைத்தெறிந்தார்.

அவர்களின் குடும்பம் முதலில் ஒற்றுமையாக மாறட்டும். அதிமுக சாதாரண இயக்கம் கிடையாது. ஒன்றரை கோடி தொண்டர்களால் இயங்கும் இயக்கம். தொண்டர்களின் உண்மையான உழைப்பு, அவர்களின் இரத்தம், உழைப்பு வியர்வையால் உருவாகியது. சசிகலா மற்றும் அவரின் குடும்பத்திற்கு இதில் எந்த விதமான இடமும் இல்லை. சசிகலா குடும்பத்திற்கு அதிமுக அடிமையாக இருக்காது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister CV Shanmugam Pressmeet 13 Feb 2021 Viluppuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->