மம்தா பானர்ஜி வீசிய தூண்டில்! மாட்டிக்கொள்ளாமல் தட்டி கழித்த ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்திருந்தார். அப்பொழுது தமிழக முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் முடிவில் அரசியலைப் பற்றி பேசவில்லை என இருவரும் இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். ஆனால் இருவரும் மூன்றாவது அணி குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த சந்திப்பு குறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது "மம்தா பானர்ஜி ஸ்டாலினிடம் பேச வேண்டிய சில கருத்துக்களை துண்டு சீட்டின் மூலம் எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதில் தேசிய அளவில் பாஜக காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும். அதற்கு ஸ்டாலின் தலைமை பொறுப்பேற்று வழிநடத்த வேண்டும் என மம்தா பானர்ஜி குறிப்பிட்டதாக தெரிய வருகிறது.

அதேபோல் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் ஆளுநர் ரவியை திரும்ப பெற கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தால் மம்தா கட்சியின் எம்பிக்கள் ஆதரவு தருவாளர்கள் என தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாவது அணி அமைக்க நவீன் பட்நாயக், அரவிந்த் கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர் ராவ் ஆகியோருடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துங்கள். வட இந்தியாவைச் சேர்ந்த நிதிஷ் குமார், சரத் பவர், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே போன்றவர்களிடம் நான் பேசுகிறேன். அனைத்து மாநில தலைவர்களையும் ஒருங்கிணைத்து வரும் நாடாளுமன்ற பொது தேர்தலை சந்திக்க வேண்டும்" என மம்தா பானர்ஜி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற பொது தேர்தலுக்குப் பின் கட்சியின் பலத்தின் அடிப்படையில் பிரதமரை தேர்ந்தெடுக்கலாம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்டாலின் தரப்பில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து தற்பொழுதைக்கு எந்த முடிவுக்கும் வரவில்லை. சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குப் பின்பு நாடாளுமன்ற பொது தேர்தலில் மூன்றாவது அணி அமைப்பதற்கு குறித்து விவாதிக்கலாம் என்று மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் பதில் அளித்ததாக செய்திகள் கசிந்துள்ளன. மம்தா பானர்ஜி வீசிய மூன்றாவது அணியினர் தூண்டிலில் தற்பொழுது மாட்டிக்கொள்ளாமல் ஸ்டாலின் தப்பித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata talks with Stalin about electoral alliance


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->