நெருப்புடன் விளையாட வேண்டாம் - அமித் ஷாவுக்கு சுட சுட பதிலளித்த மம்தா.! - Seithipunal
Seithipunal


கொரோனா தோற்று பரவல் அலை ஓய்ந்ததும் சிஏஏ அமல்படுத்தப்படும் என்று, மேற்கு வங்காளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

அவரின் அந்த உரையில், "சிஏஏ நடைமுறைப்படுத்தப்படாது என்று திரிணாமுல் காங்கிரஸ் வதந்தியை பரப்பிக்கொண்டு இருக்கிறது. கொரோனா தோற்று பரவல் அலை ஓய்ந்ததும் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்" என்று அமிதா ஷா தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், வரும் 2024 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படபோவதும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமித் ஷாவுக்கு பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தாவது, 

"மத்திய உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அவர் பாடம் கற்பிக்க வேண்டாம். 

நெருப்புடன் விளையாட வேண்டாம். இவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) மற்றும் சிஏஏ எதுவும் நடக்கபோவது இல்லை. 

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருவோம். ஆட்டம் முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்" என்று அமித் ஷாவுக்கு பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamata reply to amit shah for caa and nrc


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->