அவர்களுடன் என்னால் உடன்பட முடியாது.. இண்டி கூட்டணியை சுழற்றி அடிக்கும் மம்தா புயல்.!! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை இந்தியா கூட்டணிகட்சிகள் புறக்கணித்தன. ஆனால் இண்டி கூட்டணியில் ஒற்றுமை இல்லை என பாஜக குற்றம்சாட்டிவருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மேற்கு வங்கத்தில் ஒன்றுக்கொன்று முரண்டு 
பிடித்து நிற்கின்றன.
அதேபோல் சமாஜ்வாதி உத்தரப்பிரதேசத்திலும், ஆம் ஆத்மி டெல்லி, பஞ்சாப்பிலும் காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு தற்போதுவரை முடிவாகவில்லை. அதற்கான வேலைகள் இந்தியா கூட்டணியில் தற்போது நடந்துகொண்டு வரும் நிலையில் இண்டி கூட்டணியின் அஜெண்டாவை சிபிஎம் கட்டுப்படுத்த நினைப்பதை ஏற்க முடியாது என மம்தா பானர்ஜி கூறியிருப்பது கூட்டணிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேற்குவங்கத்தில் நேற்று நடைபெற்ற மத நல்லிணக்கப் பேரணியில் பேசிய மம்தா "எதிர்க்கட்சி கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை நான் தான் பரிந்துரை செய்தேன். ஆனால், ஒவ்வொரு முறையும் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளும் போதெல்லாம், இடதுசாரிகள் அந்த அஜெண்டாவை கட்டுப்படுத்த முயற்சிப்பதை காணமுடிகிறது. அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. 34 ஆண்டுகளாக நான் யாருடன் போராடி வந்தேனோ, அவர்களுடன் என்னால் உடன்பட முடியாது. ஆனாலும் இந்த அவமானங்களை சகித்துக்கொண்டு இண்டி  கூட்டணி கூட்டங்களில் கலந்துகொண்டேன்.


இன்று எத்தனை பேர் பாஜகவை நேருக்கு நேர் எதிர்க்கின்றனர். ஒருவர் கோயிலுக்குச் சென்றால் போதும் என்று நினைக்கிறார். கோயில், குருத்வாரா, தேவாலயம், மசூதி எனப் பல இடங்களுக்குச் சென்றவள் நான் மட்டுமே. பாபர் மசூதி விவகாரம் நடந்தபோதும், வன்முறை நடந்தபோதும், நான் தெருவில் இறங்கினேன். பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கு எனக்கு பலமும், அதற்கான அடித்தளமும் இருக்கிறது. ஆனால், தொகுதிப் பங்கீடு பற்றி நாங்கள் சொல்வதைக் கேட்க சிலர் விரும்பவில்லை. நீங்கள் பாஜவை எதிர்த்துப் போராட விரும்பவில்லை என்றாலும், குறைந்தபட்சம் அவர்களிடம் தொகுதிகளை கொடுக்காதீர்கள்"என பேசி இருப்பது இண்டி  கூட்டணியில் புயலை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamata banerjee corners cpm and congress in india alliance


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->