விஜயகாந்த் மறைவிற்கு மம்தா பானர்ஜி இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3:45 மணிக்கு காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மக்கள் வெள்ளத்தில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களும், அரசியல் கட்சி, தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் "தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்-ன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata Banerjee condoles to Vijayakanth


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->