பாஜகவை எதிர்த்து போடியிட தைரியம் இருக்கா? காங்கிரஸை சாடிய மம்தா.!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியிலேயே மோதல் போக்கு நீடித்து வருகிறது. 

மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கேட்டில் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாததால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தாவின் கட்சி தனித்து களமிறங்க முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் இந்த கருத்து மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் முசிதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா "எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி 300 இடங்களில் போட்டியிட்டால் 40 தொகுதிகளாவது வெல்வார்களா என்பதில் சந்தேகம் ஆனால் ஏன் உங்களுக்கு இவ்வளவு திமிர். உங்களுக்கு உண்மையில் தைரியம் இருந்தால் வாரணாசியில் பாஜகவை தோற்கடித்து காட்டுங்கள்.

ஆனால் உங்களால் முன்பு வெற்றி பெற்ற இடங்களில் கூட தோல்விதான் அடைய முடிகிறது உங்களால் ராஜஸ்தானில் வெல்ல முடியவில்லை முடிந்தால் அங்கு வெள்ளம் முயற்சி செய்யுங்கள் உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறது என்பதை நான் பார்க்கிறேன். அலகாபாத்தில் போய் வெற்றி பெறுங்கள் வாரணாசியில் வெற்றி பெறுங்கள் நீங்கள் அந்த அளவு தைரியமான கட்சியா என்று பார்ப்போம்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mamata alleged Congress will not win 40 constituency


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->