நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது.. 3 மாநில தேர்தல் முடிவு குறித்து மல்லிகார்ஜுன கார்கே கருத்து..!! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற பொது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது " வடகிழக்கு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறைவான தொகுதியிலேயே போட்டியிட்டது.

வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் சிறிய மாநிலங்கள் என்பதால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

பொதுவாக வடகிழக்கு மாநில அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு சாதகமாகவே செயல்படும். ஆனால் ஏராளமான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முன்வந்துள்ளனர். 

அவர்கள் மதசார்பற்ற கட்சியை ஆதரிப்பார்கள். ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை ஆதரிக்கும் தலைவர்கள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்புவார்கள்" என செய்தியாளர்கள் சந்திப்பில் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Kharge said 3 state election results will not reverberate in 2024 elections


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->