பீகாரில் முடிவுக்கு வரும் மகா பந்தன் கூட்டணி ஆட்சி..!! - Seithipunal
Seithipunal


பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் பீகார் மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது ஜேடியு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய மகா பந்தன் கூட்டணி ஆட்சி இன்றுடன் முடிவடைகிறது. 

ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளதாலும் இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தாலும் நிதிஷ்குமார் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு ராகுல் காந்தியும் நிதீஷ் குமாரும் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Maha banthan alliance ended by today in Bihar


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->