நாள் குறித்த லாரி உரிமையாளர்கள் சங்கம்.! வெளியானது தமிழகத்தில் போராட்ட அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

சரக்கு லாரிகளில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், ஒளிரும் ஸ்டிக்கர்களை குறிப்பிட்ட நிறுவனங்களில் தான் வாங்கிப் பொருத்த வேண்டும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. வேக கட்டுப்பாட்டு கருவி குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. 

அந்த கருவியை அண்டை மாநிலத்தில் ஆயிரத்து 500 ரூபாய் தான் என்றும், ஆனால் அரசு கூறியுள்ள நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல் ஒளிரும் ஸ்டிக்கர்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்றும் அதில் அதிக அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. 

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இரண்டு வாரத்தில் நிறைவேற்றாவிட்டால், வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இன்று வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, "லாரிகளில் வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை 12 கம்பெனிகளில் மற்றும் லாரிகளில் பொருத்தும் ஜி.பி.எஸ்.கருவிகளையும் அவர்கள் கூறும் 8 கம்பெனிகளில் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு நிர்பந்தம் செய்கிறது.

இதன் காரணமாக இதனால் எங்களுக்கு 5 முதல் 10 மடங்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. இதை கண்டித்து தமிழகத்தில் வருகிற 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 27-ந்தேதி முதல் மினி, கனரகம் என 12 லட்சம் லாரிகள் ஓடாது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 ஆயிரம் லாரிகள் ஓடாது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lorry strike in dec 27


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->