புதிய கூட்டணியை அமைக்க போகும் பாஜக.? எல்.முருகன் பரபரப்பு பேட்டி.! அதிர்ச்சியில் அதிமுக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்னும் ஆறு மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கட்சியும் காணொலி காட்சி மூலம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கட்சி பொறுப்பு மற்றும் நிர்வாகிகளையும் மாற்றம் செய்து வருகின்றனர். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றது. தற்போது வரும் சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடருமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பாஜக தலைவர் முருகன். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட போலியான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

வருகின்ற 2020 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரை அதிமுகவுடன் கூட்டணி தொடரும். நடிகர் ரஜினி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஆன்மீக அரசியல் ஆரம்பித்தால் வரவேற்போம். ரஜினி கட்சி ஆரம்பித்த பின்னர் அவரிடம் கூட்டணி குறித்து பேசுவோம். 

தமிழகத்தில் பாஜக தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் வெற்றிபெறும். மத்திய அரசின் திட்டங்கள் அதிக அளவில் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

l murugan press meet about alliance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->